பாரிஸில் ஆரம்பமான விமானக் கண்காட்சி!


பாரிஸில் இன்று 16 ஆரம்பமான விமானக் கண்காட்சியில் உள்ள நான்கு முக்கிய இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை காட்சிகூடங்களை பிரெஞ்சு அதிகாரிகள் மூடிவிட்டு அவற்றைச் சுற்றி கறுப்பு பலகையால் மறைத்து அமைத்தனர், இதனால் இஸ்ரேலிய ஆயுத நிறுவனங்களின் சில கண்காட்சித் தளங்கள் பார்வையிடமுடியாது மூடப்பட்டுள்ளன. 


இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி இசாக் ஹெர்சோக இந்த முடிவை 'அவமரியாதையானது' எனவும் இஸ்ரேலுக்கு எதிரான வேறுபாடு போலவே இருப்பதாகவும் கூறியுள்ளார். 


மேலும் இஸ்ரேலிய நிறுவனங்கள் ஏற்பாட்டாளர்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன, அவர்கள் பணம் செலுத்தியும் உள்ளார்கள் எனவே இது உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும் என இன்று தெரிவித்துள்ளார்.


எனினும் பிரான்ஸ் அதிகாரிகள், முன்கூட்டியே தாக்குதல் ஆயுதங்களை காண்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதில் அளித்துள்ளனர். மேலும் நான்கு இஸ்ரேலிய நிறுவனங்கள் விதிகளை மீறியுள்ளதாக கூறியுள்ளனர். 


 பிரெஞ்சு தலைநகரின் புறநகரில் உள்ள லு போர்கெட் விமானநிலையத்தில் இன்று (16) தொடங்கிய இந்தக் கண்காட்சியில், ஆயுத உற்பத்தியுடன் தொடர்புடைய சுமார் 75 நிறுவனங்கள் பங்கேற்கவிருந்தன. இராணுவ ஜெட் விமானங்கள், உலங்கு வானூர்திகள் மற்றும் ட்ரோன்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ஒரு வார கால நிகழ்வில் 48 நாடுகளைச் சேர்ந்த 2,400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபற்றியுள்ளன.






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.