பாத யாத்திரிகர்களுக்கு குடிநீர் வழங்க தொண்டு நிறுவனங்கள் விரைவு!📸
( வி.ரி. சகாதேவராஜா)
நாளை (20) வெள்ளிக்கிழமை காலை திறக்கப்படும் கதிர்காமத்திற்கான காட்டுப் பாதையில் செல்லும்
பாதயாத்திரிகர்களுக்கு குடிநீர் வழங்க தொண்டு நிறுவனங்கள் விரைந்து கொண்டிருக்கின்றன.
2025ம் ஆண்டிற்கான புனித கதிர்காமப் பாதயாத்திரை குடிநீர் சேவைக்காக சிவ தொண்டன் அமைப்பு, சேவற்கொடியோன் அமைப்பு, வலம்புரி யோன் அமைப்பு என்று பல தொண்டு நிறுவனங்கள் நேற்று நீர்த்தாங்கி கொண்ட உழவு இயந்திரங்கள் சகிதம் உகந்தமலையை சென்றடைந்தன.
நாளை முதல் காட்டுப் பாதையில் அவர்களது குடிநீர் வழங்கும் உன்னத ஜீவகாருண்ய சேவை ஆரம்பமாகிறது.
கருத்துகள் இல்லை