வாகரையை கைப்பற்றியது TMVP! மண் கவ்வியது தமிழரசு!📸


மட்டக்களப்பு, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபைக்கு தவிசாளர் மற்றும் பிரதித்தவிசாளரை தெரிவு செய்யும் அமர்வு இன்று (20.06.2025) மாலை பிரதேச சவை சபா மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி முன்னிலையில் நடைபெற்றது.


இதன்போது, தவிசாளரைத்தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இலங்கை கட்சியைச்சேர்ந்த பல்கோஸ் மோகனராசா முன்மொழிந்து வழிமொழியப்பட இன்னுமொரு தெரிவாக தமிழ் மக்கள விடுதலைப்புலிகள் கட்சியைச்சேர்ந்த கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் முன்மொழியப்பட்டார்


இதன் பிரகாரம் தவிசாளர் தெரிவு முறையில் நடத்த வேண்டுமென உள்ளூராட்சி ஆணையாளரினால் உறுப்பினர்களிடம் கோரப்பட்டது. 


திறந்த வாக்கெடுப்பு நடத்துவதற்கு 8 உறுப்பினர்களும் 11உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பு ஆதரவு தெரிவித்தனர். 


இதன்போது, தவிசாளராகப் போட்டியிட்ட பல்கோஸ் மோகனராசாக்கு 7உறுப்பினர்களின் வாக்கும் , கதிர்காமத்தம்பி தெய்வேந்திரனுக்கு 12 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 


இதன் போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியைச்சேர்ந்த தவிசாளராகப்போட்டியிட்ட கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தவிசாளராகத்தெரிவு செய்யப்பட்டார்.


அதையடுத்து பிரதித்தவிசாளர் தெரிவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்போது தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த சன்முகநாதன் ரசிகரன் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட இன்னுமொரு தெரிவாக ஐக்கிய மக்கள் சத்திய சேர்ந்த கட்சியைச் சேர்ந்த மொஹமட் புகாரி மொஹமெட் ஹைதர் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டிருந்தார்.   


இதுவும் இரசிய வாக்கெடுப்பு முறையிலேயே பிரதித்தவிசாளர் இடம் பெற்றது.


இதில் சன்முகநாதன் ரசிகரனுக்கு ஆதரவாக 10 வாக்குகளும் மொஹமெட் ஹைதர் அவர்களுக்கு ஆதரவாக 8 வாக்குகளும் கிடைக்கப்பெற்றதுடன், 1உறுப்பினர் நிராகரித்து இருந்திருந்தார் பிரதித்தவிசாளர்சண்முகநாதன் ரசிகரன் தெரிவு செய்யப்பட்டார்.  


குறித்த சபைக்கு இலங்கை தமிழர் கட்சியை சேர்ந்த ஆறு உறுப்பினர், தமிழ் மக்கள் விடுதலை கட்சியை சேர்ந்த ஏழு உறுப்பினர்கள்,தேசிய மக்கள் சத்திய சேர்ந்த மூன்று உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சத்தி ஒரு உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சேர்ந்து இரு என 19 உறுப்பினர்கள் தெரிவு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.














கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.