தென்கிழக்கு ஆசியா முழுவதும் தமிழர் வீரத்தை நிலைநாட்டிய தமிழ் மன்னன் இராசேந்திர சோழன் !
சாதனைகள் பல புரிந்த இராசேந்திர சோழன் ஒரு நகரையும், கோயிலையும், ஏரியையும் படைத்தது பயன்பாடு கருதியது ஆகும்.
சோழர் கடற்படை மலேயா, சுமத்ரா, ஜாவா, ஆகிய பகுதிகளை வென்றது. முதலில் நிகோபார் தீவுகளும், பிறகு மலேயாவின் கடே எனப்படும் கடாரம், மற்றும் சுமத்ரா, ஜாவா ஆகியனவும் வெல்லப்பட்டன.
இவ்வெற்றிகள் வட இந்திய அரசர்களைப் போல அசுவமேத யாகம் செய்வதற்காக அல்ல. இதில் பொருளியல் நோக்கமும் இருந்தது.
இராசேந்திரன் காலத்தில் தமிழர் வணிகம் செழித்தது. கடல் கடந்த நாடுகளிலும், விரிந்த கடற்பரப்பிலும், வலிமையான கடற்படை கொண்டு தமிழ் வணிகர்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்தான்.
இன்றைக்கு இலங்கை கடற்படையால் 800க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நம்மால் அவர்களைக் காக்க முடிய வில்லை.
ஆனால் தென்கிழக்கு, ஆசியா மற்றும் மேற்கு கடற்பகுதியில் தமிழக மீனவர்களோ, வணிகர்களோ எவ்வித அச்சத்திற்கும் ஆளாகத் தேவையில்லா நிலையை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இராசேந்திர சோழன் உறுதிப்படுத்தினான்.
சோழன் மீளும்..
வரலாற்று ரீதியாக பொக்கிஷம் திருவலஞ்சுழி சடைமூடிநாதர் கோவில் ராஜேந்திரன் சோழன் சிற்கலை வணங்கிய நிலையில் தந்தை இறந்த பிறகு வயதான தோற்றம் கொண்ட சிலையை வடிவமைத்து சோழர்களின் முன்னோர்கள் வழிபாடு கோவிலாக கருதப்படுகிறது..
வரலாற்று ரீதியாக தொல்லியல் துறை ஆய்வுகள் மேற்கொள்ளாமல் குடமுழுக்கு பணி நடைப்பெற தொடங்கி விட்டனர் எவ்விதமான ஆய்வுகள் முன்னேற்பாடுகள் எடுக்காமல் சோழர்களை கலக்கத்தில் குடமுழுக்கு விழா நடைப்பெற உள்ளது..
சோழ தேசத்தின் ஆணி வேர் பழையாறை முன்பு திருவலஞ்சுழி சடைமூடிநாதர் கோவில்..
விஜயாலய சோழன் காலத்தில் முற்கால சோழர்கள் வழிபாடு ஷேத்திரபாலகர் ஏகவீரி கொற்றவை காளி தேவி..
கல்வெட்டு சான்றுகள் உத்திரமேரூர் தாண்டி 100கல்வெட்டுகள் காணப்படுகின்றன..
வரலாற்று ரீதியாக செய்திகளை மறைக்கப்படுகிறதா தெரியவில்லை
கருத்துகள் இல்லை