அதிகளவு ஒலி எழுப்பிய ஆலய ஒலி பெருக்கி குறித்து பொலிசார் நடவடிக்கை!
அதிகளவு ஒலி எழுப்பிய ஆலயத்தின் ஒலி பெருக்கிகளை கைப்பற்றியுள்ளனர் பொலிஸார், குறித்த நடவடிக்கையானது அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனினால் அதிகளவு ஒலி அமைப்பு கட்டுப்படுத்தப்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆலயமொன்றில் கும்பாபிஷேகத்தையொட்டி 30 இற்கும் மேற்பட்ட ஒலிப்பெருக்கிகள் மூலம் ஒலி அமைப்பு மேற்கொள்ளபட்டிருந்தது.
இந்நிலையில் இது குறித்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனுக்கு பொதுமக்கள் இது குறித்து முறையிட்டனர்.
தொடர்ந்து கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அரசாங்க அதிபர் இது குறித்து நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சட்டத்திற்கு விரோதமான முறையில் அமைக்கப்பட்டு அதிகளவு ஒலி அமைப்பை கொண்ட 30 ஒலிபெருக்கிகளை கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்துள்ள நிலையில் ஏற்கனவே அதிகளவு ஒலி எழுப்படும் பொழுது சட்ட நடவடிக்கைகள் யாழ். மாவட்டத்தில் எடுக்கப்படும் என மாவட்ட சுற்றாடல் குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை