காரசாரமான மொறு மொறு பாகற்காய் வறுவல் செய்வது எப்படி .!

 




தேவையான பொருட்கள் 


▢2 பெரிய பாகற்காய் வட்டமாக நறுக்கியது ▢¼ tbsp மஞ்சள் தூள் ▢1 tbsp கரம் மசாலா ▢2 tbsp மிளகாய் தூள் ▢1 tbsp அரிசி மாவு ▢1 tbsp தூள் ▢1 மாவு ▢2 tbsp கெட்டியான தயிர் ▢½ பழம் எலுமிச்சை சாறு ▢உப்பு தேவையான அளவு 


செய்முறை


 ▢ முதலில் ஒரு இரண்டு நீளமான பெரிய பாகற்காயை எடுத்துக்கொண்டு தண்ணீரில் நன்றாக கழுவி கொள்ளுங்கள். பின்பு ஈரப்பதம் இல்லாமல் துடைத்துக் கொண்டு வட்டமான துண்டுகளாக நறுக்கி ஒரு பவுளில் சேர்த்துக் கொள்ளுங்கள். 


▢ பின்பு நாம் நறுக்கி வைத்திருக்கும் பாகற்காய் உடன் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் கரம் மசாலா, இரண்டு டீஸ்பூன் மிளகாய் தூள் மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு மசாலா பொருட்கள் பாகற்காயுடன் ஒட்டிக்கொள்வதற்காக.


 ▢ இதனுடன் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் கடலை மாவு, இரண்டு டீஸ்பூன் கெட்டியான தயிர், அரை எலுமிச்சை பழம் சாறு மற்றும் கடைசியாக தேவையான அளவு உப்பு சேர்த்து இதனுடன் பாகற்காய் நன்கு பிரட்டி எடுத்துக் கொள்ளுங்கள். 


▢ பின்பு மசாலா கலந்த பாகற்காயை ஒரு 15 நிமிடங்கள் நன்கு ஊற வைத்துவிட்டு பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். 


▢ பின்பு என்னை நன்கு காய்ந்ததும் நாம் ஊற வைத்த பாகற்காயை சேர்த்து நான்கு பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் கசப்பு தன்மை இல்லாத மொறு மொறு என்று சுவையான பாகற்காய் வறுவல் தயாராகிவிட்டது....


 #Tamil #TamilNews #tamilshorts #NewsUpdate #tamilarulnet #www #LatestNews #socialmedia #sujisujiaarthi

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.