அன்னபூரனி அரசு எனும் போலிக்கு யாழ்ப்பாணத்தில் அனுமதியில்லை!


இந்தியாவிலிருந்து வருகைதந்து யாழ்ப்பாணத்தில் கூட்டமொன்றை நடந்திருப்பதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவலடிப்படையில் அதை ஆராய்ந்து பொறுப்பானவர்கள் உடன் பேசினேன்.


நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் இந்நிகழ்வு நடைபெற இருப்பதாக இச்செய்தி பரவியதால் அம்மன்றத்திற்கு பொறுப்பான சிவத்திரு சூரியகுமார் (முதுநிலை விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம் ) ஐயா அவர்களை தொடர்பு கொண்டேன்.


எம்மை விட சமயத்தின் பால் பற்றும் சைவகற்பும் நிறைந்த பெருமகனார் அச்செய்தியில் உண்மையில்லை என்றும் அவ்வாறான நிகழ்வுக்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் அந்நிகழ்வுக்குரிய மண்டபவாடகைப்பணத்தை மன்றத்திற்கு தாமே கொடுத்து நிறுத்துவதற்கு தயாராக இருப்பதாகவும்.

வேறு எங்கு இந்நிகழ்வு நடைப்பெற்றாலும் அதை எதிர்த்து மக்களோடு தாமும் வருவதாகவும் உறுதியளித்தார்.


ஒரு பாரம்பரியமான மன்றத்தின் பெயருக்கு இவ்வாறு அனுமதி இன்றி அவதூறு பரப்பியமையை வன்மையாக கண்டிக்கிறோம்.


இவ்வாறான சமய சமூகப் பொறுப்புணர்வோடு மற்றைய மண்டபங்கள் நிகழ்விடங்கள் பணத்தை மட்டும் குறியாகக்கொள்ளாது நடந்துகொள்ள வேண்டும் என்று விண்ணப்பிக்கின்றோம்.


எனினும் இம்மதவியாபாரியின் ஒன்றுகூடல் நிகழ்வு எங்கு நடைபெற்றாலும் எமக்கு அறியத்தருமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்.


யாழ் மக்களின் சார்பில் அவர்களுக்கு நாம் அருளாசி வழங்கி அனுப்பி வைப்போம்.


திருச்சிற்றம்பலம் 


அகோரசிவம் உமையரசு சிவாசாரியார் 

இலங்கை சைவசமயப்பேரவை - Ceylon saivism council

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.