நல்லூரானின் பெருந்திருவிழா தொடர்பில் பொது மக்களுடனான கலந்துரையாடல்!


யாழ்ப்பாணம் நல் லூர்க் கந்தப் பெருமா னின் விசுவாவசு வருட மகோற்சவப் பெருவிழா வானது இம்மாதம் 28ம் திகதி வைரவர் சாந்தி உற்சவத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 28.08. 2025ம் திகதியில் நிறை வடையவுள்ளது.


இப்பெருந்திருவிழா முன்னாயத்தப் பணிக ளில் யாழ்ப்பாணம் மாந கரசபை ஈடுபட்டுள்ளது. அதன் ஓர் அங்கமாக உற்சவகால வீதித் தடை களுக்குள் வதியும் பொது மக்களுடனான உற்சவ கால ஏற்பாடுகள் தொடர் பான கலந்துரையாடல் எதிர்வரும் 19.07.2025 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ்.மாநகர சபையின் சுகா தார வைத்திய அதிகாரி பணிமனை மண்டபத் தில் இடம்பெறவுள்ளது.


இக் கலந்துரையாட லில் வீதித் தடைப் பகு திக்குள் வதியும் பொது மக்கள் யாவரும் தவ றாது கலந்து கொள்ளு மாறு யாழ்.மாநகரசபை யின் முதல்வர் திருமதி வி.மதிவதனி அவர்கள் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.