டென்வரில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கரம் தீப்பிடித்தது!
மியாமி நோக்கி செல்லவிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், டேக்-ஆஃப் ஆனபோது அதன் இடது பக்க பிரதான சக்கரம் தீப்பிடித்ததால், உடனடியாக ரத்து செய்யப்பட்டது. சனிக்கிழமை, ஜூலை 26, 2025 அன்று, மதியம் 2:45 மணியளவில் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விமானப் பணியாளர்கள் மற்றும் விமானிகள், சக்கரத்திலிருந்து புகை வருவதை அறிந்து உடனடியாக டேக்-ஆஃப் செய்வதை நிறுத்தினார்கள். விமானத்தில் இருந்த 173 பயணிகளும், 6 பணியாளர்களும் அவசரகால வழிகள் மூலம் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில், ஒரு பயணி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விமான நிலைய தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் மியாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கருத்துகள் இல்லை