வவுனியா நெடுங்கேணியில் கடத்தபட்ட பசு பரிதாப நிலை!📸
வவுனியா வடக்கில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் மாடு கடத்தல் சம்பவங்களில் இன்று அதிகாலை(18/07/2025-வெள்ளிக்கிழமை) 1.30மணியளவில் நெடுங்கேணி எரிபொருள் நிலையத்திற்கு முன்னால் உள்ள வீட்டின் முன்புறமாக கட்டப்பட்ட மாடு ஒன்று கயிற்றோடு அவிழ்க்கப்பட்டு கடத்தல் வாகனத்தின் பின்புறமாக கட்டப்பட்டு இழுத்துச்செல்லப்பட்டிருக்கிறது. நிலத்தோடு அரைந்து இழுத்துச்செல்லப்பட்டதால் வாகனத்தோடு கட்டப்பட்ட கயிறு அறுந்ததனாலும் மாட்டின் உரிமையாளர்கள் பின்தொடர்ந்து வந்ததனாலும் கடத்தல்காரர்கள் மாட்டினை அப்படியே விட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளார்கள்.
குறித்த நேரத்தில் வீதியில் பயணித்த வாகனமொன்று சீசிரிவியில் பதிவாகியுள்ளது. வாகனத்தோடு இழுத்துச்செல்லப்பட்டதனால் மாட்டின் அடிப்பகுதி தோல்கள் உரிந்த நிலையில் இரத்தம் கொட்டப்பட்டு மாடு குற்றுயிராக கிடக்கிறது.
கருத்துகள் இல்லை