சனி வக்ரபெயர்ச்சி கடக ராசி பலன்கள்!


உங்கள் ராசியை, சனி பகவான் வக்ர பார்வையால் பார்ப்பதால் பணவரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு, மனை வாங்கக் கடன் உதவி கிடைக்கும்.


மழை விட்டும் தூவானம் விடவில்லையே என்பார்களே, அதைப்போல அஷ்டமச் சனி விலகினாலும் 8-ல் ராகு; 2-ல் கேது வந்து அமர்ந்து கடக ராசிக்காரர்களைப் பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.


எதிலும் தடை, தேவையற்ற அவமானங் கள், பேச்சால் பிரச்னை ஆகியனவற்றைத் தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு, `இந்த வக்ர சனி காலகட்டம் என்ன செய்யப்போகிறதோ' என்கிற அச்சம் தேவையில்லை. உங்களுக்கு வக்ர சனியின் பார்வை மிகுந்த ஆறுதலையும் அருளையும் அள்ளி வழங்கப்போகிறது.


சாதகமான வீட்டில் அமர்ந்திருந்தாலும் சனிபகவான் தன் நேர்பார்வையால் பல சிக்கல்களைக் கொடுத்துக்கொண்டிருந்தார். லாப ஸ்தானத்தை அவர் பார்த்ததால், இதுவரையிலும் பணம் போகும் இடம் தெரியாமல் போய்க்கொண்டிருந்தது. தற்போது அவர் வக்ர பார்வையால் பார்ப்ப தால் பணவரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு, மனை வாங்கக் கடன் உதவி கிடைக்கும். உங்களை இதுவரை எதிர்த்தவர்கள் விலகிப் போவார்கள்.


சனி பகவான் ராசிக்கு மூன்றாம் வீட்டைப் பார்க்கிறார். இதனால் கெட்டுப் போயிருந்த உங்கள் தைரியம் மீண்டும் அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்களில் இறங்குவீர்கள். முயற்சிகளும் வெற்றியாகும். இளைய சகோதரர்கள் உங்களுக்கு ஆதர வாக நிற்பார்கள். 3-ம் இடத்தில் செவ்வாய் சஞ்சரிக்கப்போகும் ஆடி, ஆவணி மாதங் களில் அரசாங்கம் தொடர்பான முயற்சி களில் வெற்றி கிடைக்கும். அரசு அதிகாரி களிடம் பக்குவமாகப் பேசிக் காரியம் சாதிப்பீர்கள்.


சனிபகவான் ராசிக்கு 6-ம் வீட்டைத் தன் வக்ர பார்வையால் பார்ப்பது, நல்ல அம்சமாகும். கடன் பிரச்னைகளால் சிக்கித் தவித்தவர்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.


தொழில் தொடங்கப் புதிய கடன் உதவி யும் கிடைக்கும். அதேநேரம், இந்தக் காலகட்டத்தில் ஆடம்பர விஷயங்களுக்குக் கடன் வாங்காமல் இருப்பது நல்லது. வயிற்றில் வலி, அஜீரணம் தொடர்பான நோய்கள் கொஞ்சம் மட்டுப்படும். விரோதி கள் காணாமல் போவார்கள்.


என்றாலும், இரண்டாம் இடத்தில் கேது இருப்பதை மறக்கவேண்டாம். குடும்பத்தில் தேவையற்ற விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. உறவுகளே பகையாக மாறும் காலம் என்பதால் முடிந்தவரை விவாதங்களைத் தவிர்த்துவிடுங்கள். பொருள் வரவும் குறையும். எனவே வரும் பணத்தைத் திட்டமிட்டுச் செலவு செய்யுங்கள்.


உங்களின் பாக்கியஸ்தானாதிபதியும் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியுமான செவ்வாய் புரட்டாசி மாதம் முதல் சாதக மான இடங்களில் சஞ்சரிப்பதால் பிரச்னை களை எதிர்கொள்ளும் ஆற்றல் பிறக்கும்.


12-ம் வீட்டில் இருக்கும் குரு வக்ர சனி காலகட்டத்தின் இறுதியில் உங்கள் ராசிக் குள் அடி எடுத்துவைக்கிறார். இதனால் தேவையற்ற மன வருத்தங்களும் பெரிய நோய் இருப்பதுபோன்ற பிரமையும் ஏற்படும்.


பரிகாரம்: எட்டில் இருக்கும் ராகு, புதிய புதிய பிரச்னைகளைக் கொண்டுவருவார் என்பதால், ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்கையை வழிபட மறக்காதீர்கள். வக்ர சனி உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். அதைப் பயன்படுத்தி வாழ்வில் மேன்மை அடையப் பாருங்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.