மாணவிகளுக்கு தொலைபேசியில் பாலியல் தொல்லை !
ஒரு சில மாதங்களாக யாழ் மற்றும் திருகோணமலையில் உள்ள மாணவிகளின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தி தன்னை கல்வியுடன் தொடர்புடைய அதிகாரியாக குறிப்பிட்டு மாணவிகளை அச்சுறுத்தி அவர்களுடன் பாலியல் ரீதியான சம்பாசனையின் மர்ம நபர் ஒருவர் அல்லது ஒரு குழுவினர் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகின்றது.
மாணவிகளுக்கு அழைப்பை ஏற்படுத்தும் மர்ம நபர் தன்னிடம் அவர்கள் குளிக்கின்ற காணொளி இருப்பதாக போலியாகக்கூறி தான் சொல்கின்றபடி கேட்காவிட்டால் அதனை இணையத்தளத்தில் வெளியிடுவேன் எனவும் தெரிவித்து அவர்களை அச்சுறுத்தி அவர்களுடன் பாலியல் சம்பாஷனையில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பல மாணவிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிய வருகின்றது. இந்நிலையில் சில மாணவிகள் துணிச்சலான முறையில் அவ்வாறு எந்த கானொளியும் இல்லை எனவும் இருந்தால் வெளியிடுங்கள் என தெரிவித்து அழைப்பை துண்டித்திருக்கின்றனர். இதனால் மர்ம ஆசாமி விரித்த வலையில் சிக்காமல் அவர்கள் தப்பியிருக்கின்றனர்.
0740612281 என்ற இலக்கத்தில் இருந்தே அதிகமான அழைப்புகள் வந்திருப்பதாக அறியக்கூடியதாக உள்ளது. அத்துடன் 0723427765, 0778350739 ஆகிய இலக்கங்கள் உள்ளிட்ட பல இலக்கங்களில் இருந்தும் அழைப்புகள் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே குறித்த இலக்கத்தில் இருந்து வருகின்ற அழைப்பை தவிர்க்கவோ அல்லது அது தொடர்பாகன தகவல்களை திரட்டி 101 என்ற பொலிஸாரின் இலக்கத்திற்கு அல்லது இணையத்தின் ஊடாக முறைப்பாட்டை வழங்க முடியும். https://www.cert.gov.lk/report_incident
இன்றைய AI தொழில் நுட்பம் எது உண்மை, எது பொய் என ஊகிக்ககூட முடியாத அபார வளர்ச்சி அடைந்துள்ளது. ஒரு புகைப்படம் இருந்தால் மட்டும் போதுமானது சில நொடிகளில் தேவையான வகையில் காணொளியாக மாற்றக்கூடிய வசதி உள்ளது.
எனவே மாணவர்கள் தங்களை உள ரீதியாக திடப்படுத்திக் கொள்வதுடன் பிரச்சினைகளுக்கான அடிப்படைக் காரணிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தேவையற்ற அழைப்புகளை தவிர்த்துக் கொள்வதன் மூலம் அசௌகரியங்களில் இருந்து மீள முடியும்.
(இவ்வாறான அழைப்புகள் வருகின்ற வேறு ஏதும் தொலைபேசி இலக்கங்கள் இருந்தால் தந்து உதவவும்)
கருத்துகள் இல்லை