தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு!

 


தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரளுமாறு அழைக்கின்றோம். யூலை 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் 


தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சிறீலங்கா இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்றவும் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவும் வலியுறுத்தி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தின் தொடர்ச்சியாக எதிர்வரும் 09.07.2025 புதன்கிழமை மாலை 430 மணிக்கு ஆரம்பமாகி 6.30 வரை இடம்பெற்றும். மீண்டும் மறுநாள் 10.07.2025 வியாழக்கிழமை பௌர்ணமி தினத்தன்று காலை 6.30 மணி தொடக்கம் மாலை 6.00 மணிவரை கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. 

காணி உரிமையாளர்களுடன் இணைந்து முன்னெடுக்கப்டும் இப்போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 


நன்றி


செ.கஜேந்திரன்

பொதுச் செயலாளர்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.