நல்லூர் வடமராட்சி கிழக்கை ஆண்ட வரலாறு!
மக்களது எதிர்ப்பினைமீறி அதிகாரத்தின் துணையுடன் வடமராட்சி கிழக்கிலிருந்து நல்லூர் கோயிலுக்கு மணல் அள்ளப்பட்டதனை மடைமாற்ற சில அரைகுறைகள் மதவாதம் பேசுகின்றன. இந்த அரைகுறைகளுக்கு வரலாறு தெரியுமா?
இன்றைய நல்லூர் முருகன் கோயிலை உருவாக்கி நிர்வகிக்கும் குடும்பம் வடமராட்சியினை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதுவும், இடைப்பட்ட காலத்தில் கிறிஸ்தவர்களாக இருந்து வெள்ளைக்காரர்களது நிர்வாகத்தில் பணிபுரிந்தவர்கள் என்பதுவும், அத்தொடர்பின்மூலமே பிரித்தானியர்களது அனுமதிபெற்று தற்போதுள்ள இடத்திலுள்ள ஆலயம் சிறியளவில் உருவாக்கப்பட்டது என்பதுவும், பிற்காலத்தில் கோயிலை நிர்வகிப்பது தொடர்பில் ஆலயத்தில் பூசைசெய்யும் அர்ச்சகர்களுக்கும் முதலாளி குடும்பத்திற்கும் பிணக்கு ஏற்பட்டு நீதிமன்றம் சென்றபொழுதுகளில் ஆறுமுகநாவலர் தரப்பு பூசைசெய்த அர்ச்சகர்களை ஆதரித்து அவர்கள் சார்பில் வாதிட சேர் பொன் இராமநாதனை களமிறக்கியதும், முதலாளி தரப்பு தமது தரப்பில் சேர் பீட்டர் என்பவரை தமக்கிருந்த மதம் மற்றும் சமூக தொடர்புகளால் களமிறக்கி வழக்கில் முதலாளி தரப்பு வெற்றியீட்டியதும், இதனால் வெறுப்புற்ற ஆறுமுகநாவலர் முதலாவது தேர்தலில் படித்த இலங்கையராக சேர் பொன் இராமநாதனை ஆதரித்து தீவிர பிரச்சாரத்திலீடுபட்டு அவரை வெற்றியடையச் செய்ததும் தெளிவான வரலாற்று நிகழ்வுகள். இன்றும் கோயில் அன்று கிறிஸ்தவர்களாயிருந்த குறித்த முதலாளி குடும்ப வாரிசுக்களால் வழிவழியாக நிர்வகிக்கப்பட பாடுபட்டவரும், அதனால் முதலாவது படித்த இலங்கையராக தெரிவாகியிருக்கவேண்டிய இடத்தில் பழிவாங்கப்பட்டு தேர்தலில் தோற்றுபோனவரும் கிறிஸ்தவ மதத்தினை ஏற்றிருந்தவர்களே என்பதை அரைகுறைகள் அறிந்துகொள்வது நல்லது.
இது மொழிவழி தேசிய இனமடா மூடரே, உங்கள் மதவாதத்தினை உங்களோடு வைத்திருங்கள் வரலாறு தெரியாமல் இனத்தை பிளக்க முனைய வேண்டாம்.
கருத்துகள் இல்லை