முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க முத்து(77) உடல்நலக்குறைவால் சென்னையில் சனிக்கிழமை காலமானார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி-பத்மாவதி தம்பதியருக்கு பிறந்தவர் மு.க.முத்து. இவர் பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, அணையா விளக்கு. சமையல்காரன் ஆகிய பாடங்களில் நடித்துள்ளார். சமையல்காரன் பாடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், வயது மூப்பு, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மு.க.முத்து சனிக்கிழமை காலை 8 மணியளவில் இறந்ததாக அவரது மனைவி தெரிவித்தார்.
மு.க.முத்துவின் உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.★★★
மு.க.முத்து (14 ஜனவரி 1948 பிறந்த இவர்
தமிழ்த் திரைப்பட நடிகரும் அரசியல்வாதியும் ஆவார்.
முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் மூத்த மகன். மு.கருணாநிதியின் மூத்த மனைவியும் சிதம்பரம் ஜெயராமனின் சகோதரியுமான பத்மாவதி இவரின் தாயார் ஆவார்.
தந்தையின் கலையுலக வாரிசாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்த முடிவு தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தை உண்டாக்கியது.
தனது திரை வாழ்விற்கு வந்த எதிர்ப்பு பணியாக இதைக் கருதிய எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகமெனத் தனிக்கட்சி துவங்க வித்திட்டது இந்நிகழ்வு.
பூக்காரி படத்தில் தொடங்கி பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், அணையா விளக்கு என்று தொடர்ந்து பல படங்களில் நடித்தார் மு.க.முத்து. நடிப்பு மட்டும் இல்லாமல் படங்களில் பாடியும் உள்ளார். இவரின் நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா, சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க.. பாடல்கள் மக்களால் மிக விரும்பப்பட்டவை.
தனிப்பட்ட வாழ்க்கையில் இவருக்கு ஏற்பட்ட பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு - சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு - மீண்டும் திரைப்பட உலகுக்கு வந்தார். பவித்ரன் இயக்கத்தில் வெளியான மாட்டு தாவணி என்ற திரைப்படத்துக்காக தேவா இசையமைப்பில் நாட்டுப்புறப் பாடல் ஒன்றைப் பாடினார்.
வயது மூப்பு, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மு.க.முத்து
தனது 77 வது அகவையில்
19 ஜூலை 2025 இன்று
சனிக்கிழமை சென்னையில்
காலமானார்.
கருத்துகள் இல்லை