நெடுந்தீவில் பிடிபட்ட 5 அடி முதலை கிளிநொச்சிக்கு !📸


யாழ்ப்பாணம், நெடுந்தீவில் நேற்று முன்தினம்(ஜூலை 18) மாலை வேளை உயிருடன் பிடிபட்ட 5 அடி நீள முதலை ஒன்று, நேற்று (ஜூலை 19) கிளிநொச்சிக்கு கொண்டுசெல்லப்பட்டது.


நெடுந்தீவு வெட்டுக்களிப் பகுதியினை அண்மித்த இடத்தில் உள்ள நீர் வற்றிப்போன பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்தே நேற்று இந்த முதலை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.


மீட்கப்பட்ட முதலை, நெடுந்தீவு பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக நடவடிக்கைகளுக்காக இன்று கடற்படைப் படகு மூலம் குறிகாட்டுவனுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அங்கிருந்து வாகனமூடாக கிளிநொச்சி பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.