பொதுமக்கள் அவதி!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வழித்தடத்தில் இயங்கிய 750 இலக்கப்பெறும் காலை 6.45 மணியளவிலான பேருந்து சேவை திடீர் திடீரென தடைபட்டுள்ளமை காரணமாக, பாடசாலை மாணவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.
இச்சேவை தடை குறித்து முன்னறிவிப்பு ஏதும் வழங்கப்படாமை மக்கள் அதிருப்தியடையச் செய்துள்ளது. இயல்பாக இச்சேவை தினமும் பலருக்கு முக்கியமான போக்குவரத்து வசதியாக இருந்து வந்தது.
சேவையை மீண்டும் வழமைக்குத் திருப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை