இராணுவமும் jvp ஆட்சியாளர்களும் நிகழ்திய குற்றங்கள் முறைசார் குற்றங்கள் !

 


பிள்ளையான் மீதும் இனியபாரதி மீதும் ஏவப்படும் பயங்கரவாத சட்டம் அவர்களை குற்ற்றச்செயல்களில் ஈடுபடுத்திய இராணுவ கட்டமைப்பு மீது ஏவ ஜேவிபி தயாராகவில்லை 


குறிப்பாக பிள்ளையான் தொடக்கம் அருண் சித்தார்த் வரை பலரையும் வழிநடத்திய ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே இன்று வரை பாதுகாக்க படுகின்றார் 


பிள்ளையானின் பொலனறுவை தீவுசேனை வதைமுகாம் குறித்து பேசும் ஜேவிபி குறித்த வதைமுகாம் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவிதாரணவின் ஒத்துழைப்போடு நடத்தப்பட்டது என்கின்ற உண்மையை மறைகின்றது 


விசேடமாக இருதயபுரம் இராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த போதே பிள்ளையானும் இனியபாரதியும் பத்திரிகையாளர் திரு நடேசன் அவர்களை சுட்டு கொ*ன்றனர் என்கின்ற போது பிரிகேடியர் அமல் கருணாசேனவின் அனுமதியுடன் நடந்தது எனும் செய்தி உண்டு 


சேநுவர இராணுவ முகாமில் வைத்தே பிள்ளையான் கோட்டாபய ராஜபக்சே வின் ஆணைக்கு இணங்க காட்டூனிஸ்ட் பிரகீத் எக்னலிகொட அவர்களின் உடலத்தை அப்புறப்படுத்தினர் என பொதுவெளியில் தகவல் உண்டு 


பாதுகாப்பு அமைச்சின் கொடுப்பனவில் இயங்கிய தமிழ் முஸ்லீம் ஆயுத குழுக்களை வர்த்தகர்களை கடத்தி பணம் பறிக்க கோட்டாபய ராஜபக்சே அனுமதி வழங்கியிருந்த நிலையில் பிள்ளையான் பறித்த பணம் கபரண இராணுவ முகாமில் பகிரப்பட்ட செய்தியும் இருக்கின்றது 


ஆனால் இந்த செய்திகள் குறித்தோ அல்லது இதன் பின்னணியுள்ள கட்டமைக்கப்பட்ட இராணுவம் குறித்தோ விசாரிக்க ஜேவிபி விரும்பமில்லை 


அதே போல திரு அருண் தம்பிமுத்து அவர்களின் வீட்டை அபகரித்து பிள்ளையானுக்கு பெற்று கொடுத்த மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவிதாரண மீது எந்த விசாரணையும் இல்லை 


இங்கே யாழ்ப்பாணத்தில் இயங்கும் டான் தொலைக்காட்சி உரிமையாளர் குகநாதன் வரை பண கொடுக்கல் வாங்கலில் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவிதாரண ஈடுபட்டு இருக்கின்றார் 


ஆனால் குறைந்தபட்ச விசாரணை கூட இதுவரை இல்லை 


அதே போல கோட்டாபய ராஜபக்சே வின் உத்தரவுக்கு அமையவே திரு லசந்த விக் கரமதுங்க அவர்களை பிள்ளையான் படுகொலை செய்ததாக அஸாத் மௌலானா வாக்குமூலம் வழங்கியிருக்கின்றார்  


மறுபுறம் திரு லசந்த விக்கரமதுங்க கொ*லையுடன் பீல்டு மார்சல் சரத் பொன்சேகா மற்றும் அவரின் உதவியாளரும் நாவற்குழியில் 24 இளைஞர்களை காணாமலாக்கிய மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன ஆகியோரும் தொடர்புபட்டிருந்ததாக சொல்லப்படுகின்றது 


இது மாத்திரமின்றி 'கன்சைட்-Gun Site’ வதை முகாம் பொறுப்பதிகாரியாக இருந்த சுமித் ரணசிங்க பிள்ளையானை பயன்படுத்தி இளம் பெண்களை கடத்தி இருக்கின்றார் 


கோட்டாபய ராஜபக்சே மேஜர் பிரபாத் புலத்வத்தே மற்றும் கேணல் சாமி குணரத்தின ஆகியோர் தலைமையில் இயக்கிய Triploli Platoon வடக்கில் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அவரின் சாவகச்சேரி பொறுப்பாளர் சாள்ஸ் ஆகியோரோடு இணைத்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருக்கின்றது  


கிழக்கில் பிள்ளையான், இனியபாரதி , ஜெயம் , மங்களன் , மார்கன் , சிரன்சீவி என பலரை பயன்படுத்தி கடத்தல் மற்றும் படுகொலைகளில் ஈடுபட்டு இருக்கின்றது 


இராணுவம் செய்ய முடியாத வேலைகளை செய்வித்த கோட்டாபய ராஜபக்சே மேஜர் பிரபாத் புலத்வத்தே மற்றும் கேணல் சாமி குணரத்தின என யார் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை 


அதே போல கொழும்பில் 11 இளைஞர்களை கடத்தி காணாமலாக்கிய முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை ஜேவிபி பாதுகாக்கின்றது 


இதற்கிடையில் பாதுகாப்பு அமைச்சின் துணைப்படையாக மாதம் தோறும் 35 லட்சம் பிள்ளையான் , டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு அரச பொது நிதியிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கின்றது  


குறிப்பாக மொஹமட் என்கின்ற இராணுவ புலனாய்வாளன் ஊடாகவே இந்த பணம் வழங்கப்பட்டதாக அஸாத் மௌலானா வாக்குமூலம் வழங்கியிருகின்றார். 


இது போதாதென்று ஈஸ்டர் தாக்குதலோடு இணைத்து பேசப்படும் கேணல் கெலும் மத்துமகே,பிரிகேடியர் சூல கொடித்துவக்கு சம்பத் லியனகே உட்பட சகலரையும் ஜேவிபி பாதுகாக்கின்றது 


இங்கே இலங்கையில் இராணுவம் குற்றம் செய்த்திருக்கின்றது. இவை வெறுமனே தற்செயலான குற்றங்கள் (isolated incodents/ crimes) அல்ல 


இராணுவமும் ஆட்சியாளர்களும் நிகழ்திய குற்றங்கள் முறைசார் குற்றங்கள் (systemic crimes) என்கின்ற நிலைப்பாட்டுடன் விசாரணைகளை அணுகாத வரை யாருக்கும் நீதி கிடைக்கப்போவதில்லை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.