அரை நிர்வாணமாக நடமாடிய பெண்ணுக்கு ஐந்து வருடம் ஒத்திவைக்கப்பட்ட 1 மாத சிறை தண்டனை விதிப்பு!
பொத்துவில் உல்லே பிரதேசத்தில் மேலாடையின்றி அரை நிர்வாணமாக நடமாடிய தாய்லாந்து நாட்டுப் பெண்ணுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 1 மாதம் மற்றும் 2 வார சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
காதலனுடன் சண்டை பிடித்து விட்டு பொத்துவில் அறுகம்பை வீதியில் மேலாடையின்றி நடந்து சென்ற பெண்ணுக்கே இவ்வாறு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 1 மாதம் மற்றும் 2 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது
இன்று காலை பொத்துவில் உல்லே பீச் ஹொட் ஹோட்டலில் இருந்து ஓஷன் ஸ்கை ஹோட்டலின் நுழைவாயில் வரை மேலாடையின்றி நடந்து சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணியான பெண் ஒருவரை பொத்துவில் பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போதே நீதவான் ஒத்திவைக்கப்பட்ட இந்த சிறைத் தண்டனையை வழங்கி தீர்ப்பளித்தார்

.jpeg
)





கருத்துகள் இல்லை