உயர்தர தொழிற்பாடத்துறையின் தரம் 12 இற்கு மாணவர்களை அனுமதித்தல்(2025/ 2026 கல்வி வருடம்)


உயர் தர தொழிற் பாடத்துறையில் 2025/2026 கல்வி வருடத்தின் தரம் 12 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் தற்போது கோரப்படுகின்றன. இப் பாடத்துறைக்கு மாணவர்களை அனுமதிக்கும் போது க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளைக் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை என்பதுடன், உயர் தரத்திற்கு அனுமதிக்கப்பட்டு தரம் 13 வரையில் பாடசாலைக் கல்வியைப் பெற்றுக் கொள்வதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அங்கீகாரம் பெற்ற தொழிற் தகைமைகளை (NVQ 4) பெற்றுக் கொள்வதற்கும் இதனூடாக மாணவர்களுக்கு சந்தர்ப்பமளிக்கப்படுகின்றது.


2024 (2025) அல்லது கடந்த   2 வருடங்களுக்குள் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய எந்தவொரு மாணவரும் தமது பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற் பாடத்துறையுடன் கூடிய பாடசாலை ஒன்றின் தரம் 12 இற்கு விண்ணப்பிக்க முடியும். 


தரம் 12 இற்கு அனுமதிக்கப்படும் பின்னர் மாணவர்களது மென் திறன்களை விருத்தி செய்தல் மற்றும் தொழிற் துறைகளை அறிமுகம் செய்தல் ஆகியவற்றைக் குறிக்கோளாக கொண்ட மொடியுல்களை மாணவர்கள் கற்க முடியும். தரம் 13 இல் மாணவர்கள் பொருத்தமான தொழிற்றுறை ஒன்றில் NVQ 4 மட்டப் பயிற்சியைப் பெற்றுக் கொள்வதற்காக அரச தொழிற் பயிற்சி நிறுவனம் ஒன்றிற்கு பாடசாலையினால் இணைப்புச் செய்யப்படுவார்கள். இதன் போது மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி நிறுவனமொன்றைப் போன்று தொழில் நிலையம் ஒன்றில் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.


அதற்கமைய சுற்றுலாத் துறை மற்றும் விருந்தோம்பல் மோட்டார் வாகன/ வாகன தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் பராமரிப்புச் சேவைகள், மாணிக்கம் மற்றும் தங்க ஆபரண தொழில்நுட்பம்., அழகுக் கலை, கலை உட்படலான கலைகள், உணவுத் உற்பத்து, ஜவுளி, மின்சாரம் மற்றும் இலத்திரனியல் தொழில்நுட்பம், உலோக வார்ப்பு, வார்ப்பு நுட்பங்கள், இயந்திரங்களை இயக்குதல், கட்டுமான தொழிற்றுறை, உள்ளக வடிவமைப்பு, தோட்ட வடிவமைப்பு, விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழிற்றுறை, நீரியல் வளங்கள் தொழில்நுட்பம், விளையாட்டு, உயிர் பாதுகாப்பு மற்றும் நீரில் மூழ்கு (டைவிங்) திறன்கள், வணிகம் மற்றும் வழங்கல் போன்ற பல்வேறு துறைகளில் தொழிற் பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கின்றது.


இப் பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்து பாடசாலைக் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்கள் NVQ 4 சான்றிதழைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், அதனைப் பயன்படுத்தி தொழில்கள், உயர் தொழிற் கல்வி வாய்ப்புக்கள் மற்றும் முயற்சியாண்மைத் துறைகளினுள்ளும் பிரவேசிக்க முடியும்.


உயர் தர தொழிற் பாடத்துறைக்கு அனுமதி பெறுவதற்கான விண்ணப்பப் படிவம். விண்ணப்பிக்கக் கூடிய பாடசாலைகளின் பெயர் பட்டியல், தொழிற் பயிற்சியைப் பெற்றுக் கொள்ளக்கூடிய துறைகள் உட்பட அனைத்து தகவல்களும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் இணையத் தளத்தின் விசேட அறிவித்தல்கள் பகுதியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 


சாதாரண தரப் பரீட்சையில் சித்தி/ சித்தி பெறாமை போன்ற எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லாமல் மாணவர்களை பதின்மூன்று வருட கல்விக்கு உத்தரவாதமளிக்கும் குறிக்கோளுடன். கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் மூலமாக இப் பாடத்துறை நடைமுறைப்படுத்தப்படுகின்றது


இது தொடர்பில் மேலதிக தகவல்களை இவ் அமைச்சின் அனைவருக்கும் கல்விக் கிளையைத் தொடர்புகொள்வதன் மூலமோ அல்லது இந்த அமைச்சின் வலைத்தளத்தின் மூலமோ பெறலாம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.