தீப்பற்றி எரிந்த மட்டக்களப்பு புகையிரத நிலைய வளாகம்!
மட்டக்களப்பு புகையிரத நிலையத்துடன் இணைந்திருக்கின்ற ஊழியர்கள் ஓய்வு விடுதி அமைந்துள்ள வளாகத்தில் இன்று காலை 10 மணியளவில் தீ விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. திடீரென பரவிய தீ விபத்தினால் 10 ஏக்கர் பரப்பளவில் தீ பரவியதுடன் 30 க்கு மேற்பட்ட பனை மரங்கள் எரிந்துள்ளது.
தீயினை கட்டுப்படுத்த 3 மணிநேரமாக போராடிய நிலையில் தீ பிற்பகல் ஒரு மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீயினை கட்டுப்படுத்தும் முயற்சியில் குருக்கள்மடம் இராணுவ முகாமினது கப்டன் குணரத்ன தலைமையிலான 20 சிப்பாய்கள் களத்தில் இறுதிவரை நின்றதுடன் மாநகர சபையினர் அவர்களது தீயணைப்பு வாகனம் அத்தோடு பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பெற்றோலிய கூட்டுத்தாபன தீயணைப்புப் பிரிவு வாகம் மற்றும் புகையிரத பாதுகாப்புப் படைப்பிரிவு மற்றும் பொதுமக்கள் என்போர் இணைந்து தீயினை கட்டுப்படுத்த செயற்பட்டிருந்தனர்
மட்டக்களப்பு பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்திற்கு முன்னாலே புகையிரத நிலையத்தின் தீப்பரவல் ஏற்பட்ட பகுதி உள்ளதாலும் பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சியம் உள்ள பகுதிக்கு அருகிலே தீ பரவியுள்ளதாலும் தீயினை கட்டுப்படுத்த பல தரப்பினரும் களத்தில் இறங்கி போராடினர்
மட்டக்களப்பின் உஷ்ணமான காலநிலை நிலவுவுதால் காற்று வீசுவதாலும் தீ வேகமாக பரவிய நிலையில் தீயை கட்டுப்படுத்துவது மிகுந்த போராட்டமாக இருந்ததாக களத்தில் நின்றோர் தெரிவிக்கின்றனர்
கருத்துகள் இல்லை