கனடா வல் மொறின் முருகன் ஆலய இரதோற்ச்சவ திருவிழா2025📸.

புலம்பெயர்ந்த தேச நாடான கனடாவில் கனடாமொறின் முருகன்  ஆலய இரதோற்ச்சவ திருவிழா 20.07.2025 வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், பக்தர்கள் காவடி எடுத்தும், தேர் இழுத்தும் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தினார்கள். இந்த திருவிழாவில், முருகப் பெருமானின் தேரோட்டம் மிக முக்கியமான நிகழ்வாகும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு முருகனை வழிபட்டார்கள். 

இந்த திருவிழா, கனடா வாழ் தமிழர்களுக்கு ஒரு முக்கிய சமய மற்றும் கலாச்சார நிகழ்வாக உள்ளது. மொறின் முருகன் ஆலயத்தின் தேர் திருவிழா, ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில், பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து கலந்து கொன்டார்கள். மேலும், காவடி, பால்குடம் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தினார்கள். 

இந்த திருவிழாவில், வெள்ளைக்காரர்கள் சிலர் கூட காவடி எடுத்தும், முருகனை வழிபட்டும் தங்கள் பக்தி விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இது, கனடாவில் வாழும் அனைத்து இன மக்களும் முருகன் மீது கொண்டுள்ள அன்பையும், பக்தியையும் காட்டுகிறது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.