யாழில் $21.6 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்!

யாழ்ப்பாணம், வத்திராயன்,

மருதங்கேணிப் பகுதியில் இன்று அதிகாலை (ஜூலை 31) நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையில், சுமார் 21.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பெரும் தொகையாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், இலங்கை இராணுவமும் நெல்லியடி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்தச் சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 54 பொதிகளில் 108 கிலோகிராம் கேரள கஞ்சாவை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.