முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்பு சலுகைகளை நீக்கும்!
முன்னாள் ஜனாதிபதிகளுக்கும், அவர்களின் விதவைகளுக்கும் வழங்கப்படும் சிறப்பு சலுகைகளை நீக்கும் நோக்குடன்
"ஜனாதிபதிகளின் சலுகைகள் (ரத்து) வரைவுச் சட்டம்" 2025 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதியிடப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த வர்த்தமானி அறிவிப்பின்படி, இந்த வரைவுச் சட்டம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அல்லது முன்னாள் ஜனாதிபதியின் விதவைக்கும் வசிப்பிடம், மாதாந்த கொடுப்பனவு, மாதாந்த செயலாளரின் கொடுப்பனவு, உத்தியோகபூர்வ போக்குவரத்து மற்றும் இதுபோன்ற பிற வசதிகள் போன்ற சிறப்பு சலுகைகளை வழங்குவதை தடை செய்கிறது.
மேலும், இந்த வரைவுச் சட்டம் இலங்கை முன்னாள் ஜனாதிபதியின் விதவைக்கு வழங்கப்படும் மாதாந்த ஓய்வூதியத்தையும் நிறுத்துகிறது.
கருத்துகள் இல்லை