மாலைதீவில் ஜனாதிபதி அநுரவுடன் நடந்தது என்ன?


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது மாலைதீவு அரச பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து நேற்று (30) இரவு இலங்கைக்குத் திரும்பினார்.


மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சுவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி கடந்த 28 ஆம் திகதி இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.


இந்த அரச விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சுவுடனும், மாலைதீவின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஏனைய அரச தலைவர்களுடனும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினார்.


இந்த விஜயத்தின் போது, இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் ஒன்றும், மாலைதீவு வெளிநாட்டு சேவை நிறுவனம் (FOSIM) மற்றும் பண்டாரநாயக்க இராஜதந்திர பயிற்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.