இந்தியா – இங்கிலாந்து இறுதி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான பரபரப்பான ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் தொடரின் ஐந்தாவதுவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, ஷுப்மான் கில் தலைமையிலான இந்தியா, ஓலி போப் தலைமையிலான இங்கிலாந்து அணியை லண்டன் ஓவல் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
ஹெடிங்லியில் நடந்த முதல் டெஸ்டில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து ஆரம்பத்திலேயே தொடரில் ஆதிக்கம் செலுத்தியது.
ஆனால் எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 336 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா தனது திறமையை வெளிப்படுத்தியது.
லொர்ட்ஸில் 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற வியத்தகு வெற்றியையும், அண்மையில் மான்செஸ்டரில் நடந்த சமனிலையையும் தொடர்ந்து, இங்கிலாந்து தற்போது தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், வழக்கமான இங்கிலாந்து அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் தோள்பட்டை காயம் காரணமாக ஐந்தாவது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது இங்கிலாந்து அணிக்கு ஒரு பெரிய அடியாக அமைந்துள்ளது.
பென்ஸ் ஸ்டோக்ஸ் தொடரில் மொத்தமாக 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேலும் அவர், மான்செஸ்டரில் 141 ஓட்டங்களை எடுத்தார்.
பென்ஸ் ஸ்டோக்ஸிக்குப் பதிலாக ஜேக்கப் பெத்தேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் லியாம் டாசன், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் பைர்டன் கார்ஸுக்குப் பதிலாக கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன் மற்றும் ஜோஷ் டோங்கு ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மறுபுறம் இந்திய அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பந்து தாக்கி கால்பாதத்தில் எலும்பு முறிவுக்குள்ளான விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தொடலிருந்து விலகி விட்டார்.
அதேபோல் ‘நம்பர் 1’ வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஓய்வு கொடுக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளது.
அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் களம் காணுகிறார்.
அதேபோல் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் இடத்தை துருவ் ஜூரெல் நிரப்புகிறார்.
சகலதுறை வீரர் ஷர்துல் தாக்குருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை சேர்ப்பது குறித்தும் அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது.
இரு அணிகளும் இதுவரை 140 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.
அதில் இங்கிலாந்து 53 வெற்றிகளையும், இந்தியா 37 வெற்றிகளையும் பெற்றுள்ளன.
51 போட்டிகள் சமனிலையில் முடிந்துள்ளன.
கருத்துகள் இல்லை