இந்தியாவுடனான வரி பேச்சுவார்த்தை!
ஆகஸ்ட் 1 (நாளை) முதல் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று முன்னதாக அறிவித்த பின்னர், அமெரிக்கா தற்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (30) தெரிவித்தார்.
இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப்,
உலகிலேயே மிக உயர்ந்த கட்டணங்களில் ஒன்றை இந்தியா இப்போது கொண்டுள்ளனர்.
அதை கணிசமாகக் குறைக்க அவர்கள் தயாராக உள்ளனர்.
ஆனால், என்ன நடக்கிறது என்று பார்ப்போம் – என்றார்.
இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால், புது டெல்லியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வொஷிஙடன் 25% வரி விதிக்கும், மேலதிகமாக ஒரு இறக்குமதி வரியும் விதிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி புதன்கிழமை தெரிவித்தார்.
சில நாட்களில் வரிகள் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தாலும், இரு நாடுகளும் இன்னும் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ட்ரம்ப் கூறினார்.
25% வரி விதிப்பும், ட்ரம்ப் சமூக ஊடகப் பதிவில் அறிவித்த குறிப்பிடப்படாத அபராதமும், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயகத்துடனான உறவைப் பாதிக்கு விடயமாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம், பிரிக்ஸ் நாடுகளின் “அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன்” தங்களை இணைத்துக் கொள்ளும் எந்தவொரு நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் இறக்குமதிகளுக்கு அமெரிக்கா கூடுதலாக 10% வரி விதிக்கும் என்றும் ட்ரம்ப் கூறியமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை