7 நாட்களில் நினைத்தது நடக்க!


 நாளைய தினம் 7 – 7 – 2025 பிரபஞ்ச வசிய நாள் 7 7 7, மூன்று 7 ஒன்றாக

சேர்ந்து வந்திருப்பது நமக்கு ஒரு வரம். இந்த அதிசக்தி வாய்ந்த பிரபஞ்ச வசிய நாளில், நம்முடைய வேண்டுதலை இந்த பிரபஞ்சத்திடம் வைத்தால், வேண்டுதல் அடுத்த 7 நாட்களுக்குள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய manifestation மெத்தடை பற்றி தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

ஒரு வெள்ளை பேப்பரை எடுத்துக்கோங்க. அல்லது ஒரு டைரி, நோட்டுப் புத்தகம் எதுவாக இருந்தாலும் சரி, ஒரு சுத்தமான பேப்பரில் உங்களுடைய வேண்டுதலை 7 முறை எழுத வேண்டும். வேண்டுதல், ஆசை, நிறைவேறாமல் இருக்கும் கோரிக்கை, எதுவாக இருந்தாலும் சரி அதை நிகழ்காலத்தில் நடப்பது போல 7 முறை எழுத வேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு கார் வாங்கணும் அப்படிங்கற ஆசை உங்களுக்கு இருக்கு. நான் புது கார் வாங்கி விட்டேன். அந்த காரில் தினமும் அலுவலகம் செல்கின்றேன் அப்படி எழுதலாம். நல்ல வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறீர்களா. எனக்கு குறிப்பிட்ட இந்த கம்பெனியில் நல்ல வேலை கிடைத்து விட்டது என்று எழுதி, அந்த வேலைக்கு நான் தினமும் செல்கின்றேன் என்று 7 முறை எழுதலாம்.

இது மட்டுமல்ல உங்கள் வாழ்வில் இருக்கும் பிரச்சனைகள் தீர எந்த கோரிக்கையை வேண்டும் என்றாலும் நீங்கள் வைக்கலாம். திருமணம் நடக்க வேண்டும். ஆரோக்கியம் பெற வேண்டும். குறிப்பிட்ட சில கோவிலுக்கு செல்ல வேண்டும் இதுபோல ஆசைகளை கூட நீங்கள் பிரபத்துடன் சொல்லலாம்.

எந்த கோரிக்கையாக இருந்தாலும் சரி, ஒரு கோரிக்கையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதை நாளைய தினம் ஒரு வெள்ளை காகிதத்தில் 7 முறை எழுதி விட்டு, 7 நிமிடங்கள் அந்த நல்லது உங்களுக்கு நடந்து விட்டதாக கற்பனையாக நினைத்துக் கொள்ளுங்கள். கண்களை மூடி ஆழ்மனதில் இந்த நல்லது நடக்கும் என்று நம்ப வேண்டும். ஒரு நல்லதுக்காக மட்டும் வேண்டிக்கோங்க.

பல நல்லதை போட்டு குழப்ப வேண்டாம். குறிப்பாக நாளைய தினம் 7ஆம் தேதி, 7ஆம் மாதம் காலை 7:00 மணியிலிருந்து 7:17 மணிக்குள் இந்த பிரார்த்தனையை, இந்த பிரபஞ்சத்திடம் வைக்க வேண்டும். காலை இந்த நேரத்தை தவற விட்டால், நாளை மாலை 7:00 மணியிலிருந்து 7:17 மணிக்குள் இந்த பிரார்த்தனையை பிரபஞ்சத்திடம் வைக்க வேண்டும். வழிபாட்டை முடித்துவிட்டு இறுதியாக “இவ்வளவு நல்லதையும் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி” என்று 7 முறை சொல்லி விடுங்கள்.

நன்றி சொன்ன பிரபஞ்சம் அந்த நன்றி கடமைக்காகவே, உங்களுக்கு வேண்டியவற்றை வாரி வாரி கொடுக்கும். அதிசக்தி வாய்ந்த இந்த நாளில் துவங்கிய இந்த பரிகாரத்தை, அடுத்து தொடர்ந்து 7 நாட்கள், மேலே சொன்ன குறிப்பிட்ட நேரத்திற்குள் நீங்கள் செய்யும் பட்சத்தில், உங்களுடைய வேண்டுதல் 7 நாளில் நிச்சயம் நிறைவேறும். முதல் நாள் இந்த வேண்டுதலை காலை நேரத்தில் செய்தீர்களா, மாலை நேரத்தில் செய்தீர்களா என்று கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.