சட்டவிரோத கடத்தல்: 800 கிலோவுக்கும் அதிகமான பொருட்கள் பறிமுதல், நால்வர் கைது!
2025 ஜூலை 11 அன்று, வட இலங்கைக் கடற்படையினர் கிளிநொச்சியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, 800 கிலோகிராமுக்கும் அதிகமான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்களில் 300 கிலோ ஏலக்காய், 260 கிலோ மஞ்சள் தூள், 273 கிலோ உலர்ந்த இஞ்சி மற்றும் பிற மசாலாப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் அடங்கும்
இந்த நடவடிக்கையின் போது, 39 முதல் 49 வயதுக்குட்பட்ட எரக்கண்டி, கல்முனைக்குடி, திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய இடங்களைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், சட்டவிரோத பொருட்களை கடத்த பயன்படுத்தப்பட்ட இரண்டு வாடகை வாகனங்களும் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்களும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் மேலதிக நடவடிக்கைக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை