தின்டுகலில் 8 பேர் கைது!


நத்தம் அருகே கோயில் விவகாரத்தில் ஏற்பட்ட முன்பகையில் திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நத்தம் அருகே திமுக பிரமுகர் காரில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவதசெய்யப்பட்டுள்ளனர்.

 நல்லாம்பட்டி காவிரி நகரைச் சேர்ந்தவர் முருகன் (51). திமுக பிரமுகரான இவர், திண்டுக்கல் மாநகராட்சியில் அரசு ஒப்பந்ததாரராக உள்ளார். இவருக்கு திருமணமாகி முத்துமாரி (42) என்ற மனைவியும், முத்துச்செல்வி (18), பிரதீபா (17), ஸ்ரீதேவி (16) ஆகிய 3 மகள்களும், கேசவன் (13) என்ற மகனும் உள்ளனர். முத்துமாரி திண்டுக்கல் நகராட்சி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். முருகன் கடந்த ஜூலை 23 ஆம் தேதி தனது காரில் சிறுமலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்திற்கு சென்றுள்ளார். 

காரை அவரது டிரைவர் சேக்பரீத் (30) ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் திடீரென முருகனை காரில் கடத்திச் சென்றுள்ளனர். இரவு வரை வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர், முருகனுக்கு ஃபோன் செய்தபோதும் இணைப்பு கிடைக்காததால் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

 இந்நிலையில் நேற்று கோபால்பட்டி அருகே உள்ள ஜோத்தாம்பட்டி பகுதியில் முருகன் காரில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையிலான போலீசார்,

திண்டுக்கல்லில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காக கொலை செய்யப்பட்ட முருகன் உடலை, மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அறிந்த முருகனின் குடும்பத்தினர்,

உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு வர வேண்டும் என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் கலைந்து சென்றனர். 


திமுக பிரமுகர் முருகன் கொலை செய்யப்பட்டது குறித்து நத்தம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதில், மேட்டுப்பட்டியில் உள்ள செல்வ விநாயகர் கோயிலை அதே பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன் (42) என்பவர் நிர்வகித்து வந்துள்ளார். அப்போது அந்த கோயிலை மக்களுக்கான பொதுக் கோயிலாக அறிவிக்க வேண்டும் என முருகன் கூறி வந்துள்ளார். 

இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிழக்கு தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் மக்கள் வழிபாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முருகன் மீது வீரபத்ரனுக்கு ஆத்திரம் ஏற்பட்ட நிலையில், அவர் கோயில் திருவிழாக்களில் அமைத்த கடைகளுக்கு முருகன் இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

 இதனால் பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்ட வீரபத்திரன், முருகனிடம் பணம் பறிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு முருகனிடம் ஓட்டுநராக பணிபுரியும் சேக்பரீத் என்பவரை பயன்படுத்திக் கொண்டு, முருகனின் நடவடிக்கைகளை வீரபத்ரன் கண்காணித்து வந்துள்ளார்.

 அதன்படி, கடந்த 23 ஆம் தேதியன்று வீரபத்ரன் கூலிப்படையினர் மூலம் முருகனை கடத்தியதுடன் ரூ.50 லட்சம் பணம் தருமாறு கத்திமுனையில் மிரட்டியுள்ளனர். இதனால், அச்சமடைந்த முருகன் உடனடியாக தனது உதவியாளர் மூலம் ரூ.15 லட்சம் தயார் செய்து மதுரை சாலையில் உள்ள ஒரு இடத்தில் வைத்து கொடுத்துள்ளார். அதன் பிறகு மீதம் ரூ.35 லட்சத்தை தராவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

 இதனையடுத்து ரூ.35 லட்சத்தை தயார் செய்து தருவதாகவும், அதே இடத்தில் வந்து வாங்கிக் கொள்ளுமாறும் முருகன் கூறியுள்ளார். அந்த இடத்துக்கு பணத்தை வாங்குவதற்காக வீரபத்திரன் ஆர்.எம். காலனியைச் சேர்ந்த விஜய் (48) என்பவரை நிற்க வைத்துள்ளார்.

 பணத்தை கொடுத்தபோது மறைந்திருந்த போலீசார் அவரை பிடித்துள்ளனர். அவருடன் பேசியதை வைத்து தங்கள் இருப்பிடத்தை கண்டுபிடித்து விடுவார்கள் என நினைத்து, கூலிப் படையினர் பாலமேடு பகுதியில் இருந்து முருகனை காரில் கடத்தி நத்தம் ரோட்டிற்கு வந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.