9 பாடங்களிலும் A தர சித்திகளை பெற்று சாதித்த மட்/மமே/ முனைக்காடு விவேகானந்த மகாவித்தியாலய மாணவி மே. நிவேதிதா
வெளியாகிய 2024ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளின் படி மட்/மமே/ முனைக்காடு விவேகானந்த மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று பரீட்சையில் தோற்றிய மேகநாதன் நிவேதிதா அவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A தர சித்திகளை பெற்று சாதித்திருக்கிறார்.
கல்வியில் மாத்திரம் அன்றி இணைப் பாட விதானப் போட்டிகளில் தொடர்ந்து சாதிப்பவர் கிழக்கு மாகாண பாடசாலை விளையாட்டு நிகழ்வில் 2024ல் சிறந்த மேசைப்பந்தாட்ட வீராங்கனையாக தெரிவானவர். கழகமட்ட போட்டிகளிலும் வெற்றிகளை குவிப்பவர். கவிதை, கட்டுரை, பேச்சு, ஆங்கில மொழி தினப் போட்டிகள் சமூக விஞ்ஞான போட்டி என இவர் கால் பதிக்காத துறைகளே இல்லை பெரும்பாலானவற்றில் தேசிய மட்ட வெற்றிகளோடே திரும்பியவர்.
ஒரு பிள்ளையை எவ்வாறு வளர்க்க வேண்டும் அதனது எதிர்காலத்தை எவ்வாறு திட்டமிட வேண்டும் என்பதை இவரின் தந்தை மேகநாதன் சேரிடமே அவதானித்தேன் தனது மகள் கல்வியில் சாதிப்பதை விட விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்றே விரும்பினார் எந்த ஒரு விளையாட்டு நிகழ்வாக இருந்தாலும் போட்டி நிகழ்வாக இருந்தாலும் அவரே கூட்டிச் சென்று பல நாட்களை மகளுக்காக செலவு செய்து தங்கிநின்று வருவார் அவர் விருப்பப்படியே அவள் விளையாட்டு கல்வி என அனைத்திலும் சாதித்துக்கொண்டிருக்கிறாள்.
நிவேதிதாவின் தன்னடக்கம் பணிவு நிவேதிதா இன்னும் பல வெற்றிப் படிகளை எட்டிப் பிடிக்க கடவுள் துணையிருப்பார். நிவேதிதாவின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். அத்தோடு நிவேதிதா அனைத்துப் பாடங்களிலும்A சித்திகளை பெற வழிகாட்டிய முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய அதிபர் ஆசிரியர்களையும் விசேடமாக பாராட்டுகிறேன்
கருத்துகள் இல்லை