ரோமில் பாரிய தீவிபத்து!!
இத்தாலியின் தலைநகரான ரோம் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப்பு சம்பவத்தில் சிக்கி 45 பேர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்புவதற்காக வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்த போது, லொறியொன்று எரிபொருள் குழாய் மீது மோதியதில் குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் அதன் பின்னர் குறித்த இடத்தில் தீ பரவிய நிலையில், மற்றுமொரு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் பெரும் வெடிப்பு சத்தம் எழுந்ததாகவும் கரும் புகை அடர்த்தியாக எழுந்ததுடன் நகரம் முழுவதும் வெப்புச் சத்தம் உணரப்பட்டதாகவும் வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
ரோம் நகர மேயர் ரொபர்டோ குவால்டியேரி, பெற்றோல் நிரப்பு நிலையம் மற்றும் அதற்கு அருகில் பாதிக்கப்பட்ட விளையாட்டு மைதானம் என்பவற்றைப் பார்வையிட்டுள்ளார்.
இச் சம்பவம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதில் பொதுமக்கள், பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை