பாடசாலையில் பாம்புகள்


 பாடசாலை ஒன்றில் பாம்புகள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குருநாகல் அருகே பாடசாலையொன்றின் ஆரம்பப் பிரிவு வெளிப்புற வகுப்பறையில் இருந்து 30 பாம்புக்குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குருநாகல் போகமுவ மத்திய மகா வித்தியாலயத்தின், ஆரம்பப் பிரிவில் உள்ள வெளிப்புற வகுப்பறையில் இருந்தே மேற்கண்டவாறு பாம்புக்குட்டிகள், பெரிய பாம்புகள் மற்றும் பாம்பு முட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி புதிய அதிபர் ஒருவர் பாடசாலையில் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்திலையில் அடிக்கடி பாடசாலை வளாகத்தில் பாம்புகள் உலாவுவதாக மாணவர்கள் தெரிவித்த நிலையில்

, புதிய அதிபர் தலைமையில் சோதனை செய்யப்பட்டதில் 30 பாம்புக்குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

அதேவேளை, போகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 13 வரை சுமார் 2,000 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். ஆரம்ப பிரிவில் மாத்திரம் 153 மாணவர்கள் உள்ளனர்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.