நாட்டில் டெங்கு எச்சரிக்கை!!


இலங்கையின்  பல பகுதிகளில்  நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த ஆயிரக்கணக்கானோருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் தற்போது டெங்குநோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சினால் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கடந்த வாரம் முதல் டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பிக்கப்பட்டு நேற்று வரையான காலப்பகுதியில், 111,031 இடங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், 2,999 இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.