இலங்கையில் வரப்பிரசாதமாகும் தொழிநுட்பம் !!

 


இலங்கையில், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கிடையேயான இடைவெளியை குறைக்க, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மொழிபெயர்ப்பு மென்பொருள் ஒன்றை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் மூலம், பேசும் சிங்களம் சில நொடிகளில் தமிழாகவும், தமிழில் பேசுவது சிங்களமாகவும் தானாக மொழிபெயர்க்கும் வசதியை இந்த மென்பொருள் வழங்கும்.

அடுத்த 6 மாதங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் எனவும், இது மொழித் தடையை சமாளிக்க முக்கியமாக பயன்படும் எனவும் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.  

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அறிவிப்பின்படி, மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து பல கல்வி மற்றும் தனியார் நிறுவங்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளன.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.