வளர்ப்பு நாயை கவ்விச் சென்ற சிறுத்தை புலி!


நுவரெலியா, லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்கூம்ஸ் கீழ்ப் பிரிவு தோட்டத்திலுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் நேற்று (31) நள்ளிரவு 12 மணியளவில் சிறுத்தை ஒன்று புகுந்ததால், அப்பகுதியில் பெரும் அச்சநிலை ஏற்பட்டுள்ளது. 


இப்பகுதியில் புகுந்த சிறுத்தை, நாயொன்றை கவ்விச் செல்லும் காட்சி, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கெமராவில் பதிவாகியுள்ளது. 


இப்பிரதேசத்தில் உள்ள வீடுகளில் வளர்க்கப்பட்ட ஐந்திற்கும் மேற்பட்ட நாய்களை சிறுத்தைகள் கவ்விச் சென்றுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். 


இப்பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனைக் கண்காணிக்க, நுவரெலியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வருகை தந்து, சிறுத்தைகளின் இருப்பிடங்களை அவதானிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.