செங்கலடியைச் சேர்ந்த நபரே மட்டு சவுக்கடியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.!
இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு சவுக்கடி பகுதியிலுள்ள சவுக்குத் தோட்டம் ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் செங்கலடி கணேச கிராமத்தை சேர்ந்த 34 வயதானவர் என அடையாளங்காணப்பட்டுள்ளது.
ஏறாவூரிலுள்ள நகைக்கடையொன்றில் பணிபுரிந்து வரும் குறித்த இளைஞர் நேற்றைய தினம் வீட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்த நிலையிலே இன்று சவுக்குத் தோட்டத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த உயிரிழப்பு தொடர்பான விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டு சோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது
கருத்துகள் இல்லை