ஈரானில்11 கணவர்களை கொன்றவருக்கு மரண தண்டனை விதிப்பு!


ஈரானில் 22 ஆண்டுகளில் 11 கணவர்களின் உடலில் நஞ்சைச் செலுத்திக் கொலைசெய்த பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


குற்றம் புரிந்த 56 வயது கோல்சும் அக்பரி 2000 முதல் கணவர்களைக் கொல்லக் குறிவைத்த நிலையில் 2023இல் பிடிபட்டார்.


அக்பரி எத்தனை பேரைக் கொன்றார் என்று அவருக்கே நினைவில்லை என்று கூறப்படுகிறது. அவரது முதல் இரண்டு திருமணங்கள் இனிதாக அமையவில்லை.


பின்னர் அவர் வயதான ஆடவர்களை மணமுடித்து அதிக வரதட்சணை பெற்றார். அடுத்த சில மாதங்களிலேயே கணவர்களைக் கொலைசெய்துள்ளார்.


அவர்களில் ஒருவர் மட்டும் உயிர்தப்பினார். ஆனால் அவர் பொலிஸாரிடம் முறையிடவில்லை. உயிரிழந்தவர்கள் வெவ்வேறு நகரங்களில் வசித்ததால் அதிகாரிகளால் குற்றங்களைத் தொடர்புபடுத்த முடியவில்லை.


இந்நிலையில் சாரி புரட்சி நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை (6) அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அக்பரிக்கு இஸ்லாமிய சட்டத்தின் கீழ் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கோரியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பில் 45 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.