துருக்கியில் நில நடுக்கம்!

 


துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கி அதிர்ந்ததாகவும் மக்கள் பீதியால் பதறியதாகவும் சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன. சுமார் 6.1 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.


மேற்கு துருக்கியில் 11 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியின் பிரதான நகரங்களான இஸ்தான்புல், இஸ்மிர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது.இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இதுவரை எந்த அறிவிப்புக்களும் வௌியாகவில்லை.எனினும் துருக்கியின் பலிகேசிர் மாகாணத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.