யாழில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலி!📸

 


யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் இன்று விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


இந்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் ஏ9 வீதியில் எழுதுமட்டுவாள்பகுதியில் இடம்பெற்றுள்ளது.


இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதுண்டே இந்த விபத்து சம்பவித்துள்ளது.


அதாவது திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்து பயணித்துக்கொண்டிருந்த வேளை எழுதுமட்டுவாள் பகுதியில் உள் வீதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஏ9 வீதியில் ஏற முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.