காலம் - 13 நவம்பர் 1989 இடம் - பட்டலந்தை வதைமுகாம்!
விஜயவீரா- என்னை சட்டப்படி நீதிமன்றில் நிறுத்துங்கள். நான் என் கருத்தை அங்கு கூறுகின்றேன்.
ரணில் - சட்டமாவது மயிராவது. உனது தோழர்கள் 60ஆயிரம் பேரை எப்படி கொன்று புதைத்தோமோ அதேபோன்று உன்னையும் கொல்லப் போகின்றோம்.
விஜயவீரா- இதற்குரிய பதிலை என் தோழர்கள் ஒருநாள் தருவார்கள்.
காலம் - 22 ஆகஸ்டு 2025 இடம் - கொழும்பு நீதிமன்றம்.
அரசு பணத்தை தமது சொந்த தேவைக்காக பயன்படுத்திய குற்றச்சாட்டில் ரணில் நீதிமன்றில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.
மிஸ்டர் கிளீன் அவர்களின் உண்மை முகம் நாட்டு மக்களுக்கு இனங் காட்டப்பட்டுள்ளது.
அவரது வழக்கறிஞர்கள் கொஞ்சம்கூட வெட்கம் இன்றி அவருக்கு நீரிழிவு நோய், மனைவிக்கு புற்றுநோய் எனவே பிணையில் விடுதலை செய்யுங்கள் என மன்றாடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த அரசியல்வாதிகளுக்கு பதவியில் இருக்கும்போது எந்த நோயும் இருப்பதில்லை.
ஊழல் வழக்கில் கைது செய்தவுடன் எல்லா நோயும் வந்துவிடுகின்றன.
செய்தி – பிணை மறுக்கப்பட்டு ரணில் சிறை செல்கிறார்.
விஜயவீராவின் தோழர்கள் உரிய பதிலை ரணிலுக்கு வழங்கியுள்ளனர். பாராட்டுகள்.
இது மற்ற அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமையட்டும்.

.jpeg
)





கருத்துகள் இல்லை