யோக்கியன் வருகிறார் செம்பை எடுத்து வையுங்க உள்ளே!
மிஸ்டர் கிளீன் அல்லது திருவாளர் பரிசுத்தம் என்று அழைக்கப்படும் ரணில் அவர்கள் இப்போது மாட்டியிருப்பது பட்டலந்தை முகாம் கொலைகளுக்காக அல்ல.
மாறாக மக்கள் பணம் 150 லட்சம் ரூபாவை தனது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தியமைக்காகவே.
இத்தனை நாளும் தன்னை ஒரு கறை படியாத தூய அரசியல்வாதியாக நடித்து வந்தவரின் ஒரு முகம் இன்று தோலுரிக்கப்பட்டுள்ளது.
தெரிந்ததே இவ்வளவு என்றால் தெரியாமல் எவ்வளவு சுருட்டியிருப்பார் இந்த யோக்கியன்?
இங்கு வேடிக்கை என்னவென்றால் இது ஒரு அரசியல் பழி வாங்கல் என்று நாமல் ராஜபக்சா கண்ணீர் வடிக்கிறார்.
ஏனெனில் அடுத்து தன்னையும் கைது செய்து இந்திய நடிகைக்கு கொடுத்த பணம் குறித்து விசாரணை செய்வார்களோ என்ற அச்சம் அவருக்கு.
அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் சுருட்டி வைத்திருக்கும் மக்கள் பணம் யாவும் பறிமுதல் செய்ய வேண்டும். என தோ.பாலன் முகநூல் குறிப்பிட்டிருந்தார்.
கருத்துகள் இல்லை