ரணில் விக்ரமசிங்க கைது தொடர்பான குற்றச்சாட்டுகள் மத்தியில் யூ.என்.பி அழைப்புக்கடிதம் வெளியீடு!
ஐக்கிய தேசியக் கட்சி (UNP) நேற்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோருக்கு 2023 செப்டம்பர் மாதம் இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகம் வழங்கியிருந்த உத்தியோகப்பூர்வ அழைப்புக் கடிதத்தின் பிரதியை வெளியிட்டது.
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராஃப்டரி கையொப்பமிட்டிருந்த அந்தக் கடிதம், முன்னாள் ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணி ஆகியோரை 2023 செப்டம்பர் 22ஆம் திகதி வோல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விருந்து மற்றும் விழாவில் கலந்துகொள்ள அழைத்திருந்தது.
வோல்வர்ஹாம்ப்டன் பயணத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், எந்தவிதமாகவும் அரச நிதி தவறாக பயன்படுத்தப்படவில்லை என்பதை விக்ரமசிங்க முன்னரே மறுத்திருந்ததை மீண்டும் வலியுறுத்தி, UNP இதனைத் தெளிவுபடுத்தியது.
கருத்துகள் இல்லை