யாழில் அ.அங்கஜனின் வீட்டில் ஏராளமான துப்பாக்கிகள், தோட்டாக்கள் மீட்பு!📸
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் உள்ள அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் வீட்டில் மலசல குழி வெட்டுவதற்காக முற்பட்ட வேளை சந்தேகத்துக்கிடமான பொருள் காணப்படுவதை அடுத்து பொலிசார் ஊடாக நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனை அடுத்து இன்றைய தினம் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் ஏ ஏ ஆனந்தராஜ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியின்போது 30 ரி 56 ரக துப்பாக்கிகளும் அதற்கு பயன்படுத்தும் ஐயாயிரம் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த ஆயுத மீட்பு தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை