அநுரவுக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டாலும் நாம் முன்னிற்போம்!


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டாலும் நாங்கள் ஒன்றிணைவோம் என தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


எங்களுக்கு யார் என்பது முக்கியமில்லை. அநீதி ஒன்று ஏற்பட்டால் அதற்காக நாம் ஒன்று சேர்வோம் எனவும் அவர் கூறியுள்ளார்.


அரசியலமைப்பின் ஊடான ஒரு சர்வாதிகாரம் ஒன்று இன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது என்றும், இது தப்பான எடுத்துக்காட்டாகும் எனவும் கூறியுள்ளார்.


இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நிதிமோசடிக்கான நீதி கோரும் ஆணைக்குழு ஒன்றை ஆரம்பித்து நடவடிக்கை எடுப்பதை விடுத்து, தங்களுக்கு வேண்டாதவர்களை பழிதீர்க்கும் அல்லது தண்டிக்கும் செயற்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என விமல் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும், பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களை தண்டிக்க நினைத்தால் அதற்காக ஒரு ஆணைக்குழுவை ஆரம்பித்து நாட்டு மக்கள் அனைவரும் அதில் முறைப்பாடுகளை தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கி அதை விசாரணைக்குட்படுத்தியே தீர்வு வழங்குவதே நீதியான செயற்பாடாகும் எனவும் அவர் விளக்கியுள்ளார்.


இல்லாமல் தங்கள் நினைத்த மாத்திரத்தில் எதிர்க்கட்சியினரை முடக்க நினைத்தால் அதற்காக யாராக இருந்தாலும் நாம் முன்னிற்போம எனவும் விமல் தனது உரையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.