இராணுவ நில ஆக்கிரமிப்புக்கு எதிராக கண்டனப் பேரணி!📸

 <

/p>

வடமராட்சி பருத்தித்துறை நகர் பகுதியில் அஞ்சல் அலுவலகத்துக்கு தனியார் ஒருவரினால் நன்கொடையாக வழங்கப்பட்ட காணி .பருத்தித்துறை நீதிமன்றத்துக்கான காணி.பருத்தித்துறை நகரசபைக்கு சொந்தமான காணி.பருத்தித்துறை பிரதேச.நோ.கூ.சங்கத்துக்கு சொந்தமான காணிகளை ஆக்கிரமித்து பருத்தித்துறை துறைமுகத்துக்கு முன்னால் ராணுவமுகாம் பருத்தித்துறை வெளிச்சவீட்டினை ஆக்கிரமித்து கடற்படையும் முகாம் அமைந்துள்ள காணிகளை விடுவிக்ககோரி  


பருத்தித்துறை நகரசபையினால் கட்சிவெறுபாடு இல்லாமல் ஆர்ப்பாட்டபேரணி ஒன்று துறைமுகத்தின் முன்னால் இருந்து பருத்தித்துறை பிரதேசசெயலகம் வரை நடத்தப்பட்டது இப்போராட்டத்துக்கு பருத்தித்துறை வர்த்தகர்கள் தமது கடைகளை பூட்டி போராட்டத்தில் கலந்துகொண்டனர் அத்துடன் ஏனைய பிரதேசசபைகளின் தவிசாளர்கள் .பிரதேச சபை .நகரசபை உறுப்பினர்கள் .பொது அமைப்புகளின் உறுப்பினர்கர்கள். பொதுமக்கள் .என்பவர்

கலந்துகொண்டனர் .வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பும் கலந்து கொண்டது ஆர்ப்பாட்ட முடிவில் பருத்தித்துறை உதவிபிரதேச செயலர் தயானந்தன் அவர்களிடம் பருத்தித்துறை நகரபிதா வின்சனடிப்போல் டக்கிளஸ்போல் மகஜரை கையளித்தார் இவைகளை விட பருத்தித்துறை பிரதேசசபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான 15.673 ஏக்கர் நிலத்தையும் படையினர் கையகப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.