புதிய பிரதேச செயலாளர்கள் நியமனம்!


நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட பிரதேச செயலாளர்கள் இன்று (25.08.2025) முறையான கடமையேற்பை மேற்கொண்டனர்.


நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு நியமிக்கப்பட்ட திரு. என். பிரபாகரன் அவர்களும், பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு நியமிக்கப்பட்ட திரு. என். திருலிங்கநாதன் அவர்களும் காலை 09.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் முன்னிலையில் கடமையேற்றனர்.


இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் திரு. ஆ. சத்தியமூர்த்தி ஆகியோரும் பங்கேற்றனர்.


இதனுடன், பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு நியமிக்கப்பட்ட திரு. என். திருலிங்கநாதன் அவர்கள் இன்று (25.08.2025) தமது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டதோடு, நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு நியமிக்கப்பட்ட திரு. என். பிரபாகரன் அவர்கள் நாளை மறுதினம் தமது பொறுப்புகளை ஏற்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.