கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்குள் நூளைந்த NPP !

 


கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இன்றைய தினம் பாராளுமன்றஉறுப்பினர் எலகுமரன், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மோகன், பிரதேச சபை உறுப்பினர் ஆகியோர் கள விஜயம் மேற்கொண்டிருந்தோம்.


இதன்போது, அங்கு நிலவும் குறைபாடுகள் பற்றி கேட்டறிந்துக் கொண்டோம். அத்தோடு, இந்த வைத்தியசாலையில் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு ஒன்று அமைக்கப்பட்டு, ஆளனி பற்றாக்குறை காரணமாக குறித்த பிரிவு இயங்கவில்லை என வைத்தியசாலை பணிப்பாளர்  சுட்டிக்காட்டினர்.


இதனை கருத்திற் கொண்ட எலக்குமரன் உடனடியாக துறைசார் அதிகாரிகளுடனும், சுகாதார அமைச்சருடனும் தொடர்பு கொண்டு மேற்படி விடயத்தை தெளிவுப்படுத்தினேன்.


பின்னர், வெகுவரைவில் பெண்களின் மகப்பேறு மற்றும் குழந்தை நலம், மகளிர் நோய்கள், தொடர்பான சிறப்பு மருத்துவ சேவைகளை வழங்கும் பிரிவு மீண்டும் இயங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், ஆளனி பற்றாக்குறை தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களான  எலக்குமரன் இதன்போது வைத்திய பணிப்பாளரிடம் தெரிவித்தார்.








கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.