சஷீந்திர ராஜபக்ஷவுக்கு 29 ஆம் திகதி வரை விளக்கமறியல்!📸
ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்ட தனது அரசியல் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் அழித்ததற்காக இழப்பீடாக ரூ. 8,850,000/- ஐ சட்டவிரோதமாகப் பெற்று ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் .







.jpeg
)





கருத்துகள் இல்லை