சர்வதேச நீதி கோரி யாழில் ஊர்திப் பவனி ஆரம்பம்!📸


சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நாளை சனிக்கிழமை, வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் ஊர்திப் பவனி ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.


உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், அங்கிருந்து ஊர்திப் பவனி தொடங்கியது. இது யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, நாளை காலை போராட்டம் நடைபெறவுள்ள செம்மணியை சென்றடையவுள்ளது.


இந்தப் போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆதரவு தெரிவித்துள்ளார். அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.